async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: தொப்பை குறைய சிறந்த உணவு :

தொப்பை குறைய சிறந்த உணவு :

 ஆளி விதைகளை உட்கொள்வது ஏன் சிறந்தது?

* ஆளி விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது, இது செரிமான செயல்பாட்டின் போது உணவை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் நாள் முழுவதும் நிறைவாக உணர்வீர்கள். கரையாத நார்ச்சத்து நல்ல குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகிறது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.
* ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆளிவிதைகளில் மாவுச்சத்து மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால் கலோரிகள் அதிகம் இல்லை. அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

* லிக்னான் என்று அழைக்கப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆளிவிதைகளில் ஏராளமாக உள்ளன. அவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தவும், வயதாவதை மெதுவாக்கவும் உதவுகின்றன. அவற்றில் உள்ள லிக்னான்கள், அதிகளவு ஈஸ்ட்ரோஜனை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது சீரான ஹார்மோன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

ஆளி விதையில் ஒரு ஆரோக்கியமான உடனடி காலை உணவு தயார் செய்ய தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்:

  • 20 கிராம் – ஓட்ஸ்
  • 35 கிராம் – தயிர்
  • 20 மில்லி – தண்ணீர்
  • 3 கிராம் – பாதாம்
  • 3 கிராம் – வால்நட்
  • 2 கிராம் – கருப்பு திராட்சை
  • 2 கிராம் – சூரியகாந்தி விதைகள்
  • 2 கிராம் – பூசணி விதை
  • 2 கிராம் – பேரீட்சை
  • 1 கிராம் – சியா விதைகள்
  • 1 கிராம் – ஆளி விதைகள்

செய்முறை

*ஓட்ஸ், தயிர் மற்றும் தண்ணீரை ஒன்றாக சேர்த்து, நன்றாக மிக்ஸ் ஆகும்  வரை கிளறவும்.

* மேலே குறிப்பிட்ட அனைத்து கொட்டைகள், உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளின் கலவையுடன் டாப் அப் செய்யவும்.

இதேபோல் ஆளிவிதையில் மில்க் ஷேக்-கும் செய்யலாம். அதற்கு தேவையான பொருட்கள் இதோ!

  • ஆளிவிதைப் பொடி – 2 டீஸ்பூன்
  • வாழைப்பழம் – 2 துண்டுகள்
  • தேங்காய் பால் – 1 கப்
  • ஸ்ட்ராபெர்ரி – 1 கப்
  • தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒரு மிக்சி கிரைண்டரில் சேர்த்து நன்றாக மில்க் ஷேக் பதத்துக்கு  அரைக்கவும். பிறகு, அதை ஒரு கிளாஸில் மாற்றி, பருகலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம்.

இதை செய்து சாப்பிட்டு வர வயிறு தொப்பை குறையும். 

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog