async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: உருளைக்கிழங்கு கிரேவி

உருளைக்கிழங்கு கிரேவி

 தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு - 4


எண்ணெய் - 2 tsp

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 1

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 2

சோம்பு - 1/2 tsp

பிரியாணி இலை - 1

தக்காளி - 2

மஞ்சள் பொடி - 1/2 tsp

மிளகாய் பொடி - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

தனியா பொடி - 1 tsp

உப்பு - தே . அ

செய்முறை :

இந்த கிரேவியை முற்றிலும் குக்கரில் தான் செய்ய வேண்டும். எனவே குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றுங்கள்.

காய்ந்ததும் பட்டை, இலை, ஏலக்காய் போடுங்கள். பொறிந்ததும் இஞ்சி , வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் தக்காளி சேருங்கள். பின் மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , தனியா பொடி , கரம் மசாலா பொடி சேர்த்து வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேருங்கள்.தற்போது உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள்.

உப்பு சரி பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போடுங்கள். 4 -5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

குக்கர் பிரஷர் தானாக வெளியேறும் வரை காத்திருங்கள். காற்று வெளியேறியதும் மூடியைத் திறந்து காரம் சுவை சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போதுமான கெட்டிப்பதம் இருந்தால் கிண்ணத்தில் மாற்றி பறிமாறுங்கள். இல்லையெனில் சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.சுவையான உருளைக்கிழங்கு கிரேவி ரெடி. 

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog