async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: சுவையான சேமியா பாயசம்

சுவையான சேமியா பாயசம்

 தேவையான பொருட்கள்:



பால், 

சர்க்கரை,

சேமியா, 

முந்திரி,

 பாதாம்,

பிஸ்தா,

ஏலக்காய்,

 நெய்,

மில்க் மெய்டு

செய்முறை:

1. முதலில் 2 ஸ்பூன் சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு பொடியாக்கி கொள்ள வேண்டும்.

2. பின்பு, கடாயில் நெய் ஊற்றி சேமியா, முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

3. இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்த பின்பு வறுத்த சேமியாவை அதில் சேர்க்க வேண்டும்.

4. ஒரு கொதி வந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். அது கரைந்ததும் 2 ஸ்பூன் நெய்யை அதில் ஊற்ற வேண்டும்.

5. இப்போது ஏலக்காய் பவுடரை அதில் சேர்க்க வேண்டும். 2 நிமிடம் கொதிக்க பின்பு அதில் மில்க் மெய்டை சேர்க்க வேண்டும்.

6. பாலுடன் மில்க் மெய்டு சேர்ந்து கொதித்து வந்ததும் அதில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்க்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு பாயாசம் பதத்தில் இறக்கினால் சூப்பரான டேஸ்டான சேமியா மில்க் மெய்டு பாயாசம் தயார்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog