async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: சுவையான வேர்க்கடலை சட்னி

சுவையான வேர்க்கடலை சட்னி


 

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கமலை – முக்கால் கப்

வர மிளகாய் – 2

புளி – சிறிதளவு

பூண்டுப் பல் – 4

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

வர மிளகாய், புளி இரண்டையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். வேர்கடலையை கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, வரமிளகாய், புளி, உப்பு என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை சூடாக்கி, நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். இதை சட்னியில் சேர்த்து கலந்துவிடவேண்டும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சுவையான வேர்க்கடலை சட்னி தயார். இதை சாதத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும், நீங்களே விரும்பி சாப்பிடுவீர்கள். மேலும் வேர்க்கடலை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடியது என்பதால், இந்த சட்னியை நீங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். எனவே இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog