async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com

சாஃப்டான இட்லி செய்ய 5 டிப்ஸ்

 

Idly : இட்லியை பஞ்சு போல உங்க வீட்டில் செய்ய இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் போதும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.




1. முதலில் மூன்றறை ஆழாக்கு இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து ஒரு ஆழாக்கு இருந்தால் போதுமானது. அதாவது ஒரு பங்கு உளுந்துக்கு, மூன்றரை பங்கு இட்லி அரிசி எடுத்து இரண்டையும் சுத்தமான தண்ணீர் ஊற்றி தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

2. ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி தான் மாவு அரைத்து முடிக்க வேண்டும். உளுந்து அரைக்க குறைந்த பட்சம் 30 நிமிடம் வரை செலவிடுங்கள். உளுந்து எந்த அளவிற்கு நைசாக அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி சாஃப்டாக வரும். 30 நிமிடம் இடையிடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும்.

3. பிறகு அதை எடுத்து விட்டு அரிசியை போட்டு 15 நிமிடம் வரை அரைத்தால் போதுமானது. அரிசி கொரகொரவென்று இருக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விட்டால் இட்லி அவ்வளவு நன்றாக வராது. அரிசிக்கு முதலிலேயே தண்ணீரை ஓரளவிற்கு தாராளமாக ஊற்றலாம். ஆனால் உளுந்திற்கு முதலில் தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. அரிசி அரைக்கும் பொழுதே கல் உப்பு சேர்த்து அரைத்து விட வேண்டும். இட்லி நன்றாக வர கல் உப்பு தான் சேர்க்க வேண்டும்.

5. பின் இரண்டையும் ஒன்றாக கலந்து எட்டு மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி ஊற்றும் பொழுது நன்றாக கலந்து விட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். அதன் பிறகு எப்போதும் நீங்கள் மாவை கிளறக் கூடாது. பிரிட்ஜில் இருந்து எடுத்து அரை மணி நேரம் கழித்து இட்லி ஊற்றினால் நல்லது. உடனே ஊற்றினால் அவ்வளவாக சாஃப்ட் இருக்காது. உங்களுக்கு தேவையான மாவை மட்டும் பிரிட்ஜில் இருந்து எடுத்து உபயோகப்படுத்துங்கள்.

2. இதில் சொல்லப்பட்ட டிப்ஸை அப்படியே செய்தால் நிச்சயம் சாஃப்பான இட்லி வந்துவிடும்.

மீல் மேக்கர் வடை

தேவையான பொருட்கள்:



மீல் மேக்கர் - 100 கிராம்

பொட்டுக் கடலை மாவு - அரை கப்

பெரிய வெங்காயம் - 1

கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

கறி மசாலா - ஒரு ஸ்பூன்

இஞ்சி, பூண்டு, விழுது - ஒரு ஸ்பூன்

சோம்பு, சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூம் - கால் ஸ்பூன்

சோள மாவு - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு மற்றும் சீரகத்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.பிறகு, வெந்நீரில் கேவ வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.இதன் இடையே, வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான மீல் மேக்கர் வடை ரெடி.



தண்ணீர் பூரி:

 தண்ணீரில் பூரி சுடத் தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

தண்ணீரில் பூரி செய்முறை:

முதலில் பூரிக்கு எப்போதும் மாவு பிசைவது போல் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு, அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவை உருண்டை பிடித்து வட்டமாக பூரி தேய்த்துக்கொள்ளவும்

இப்போது பூரி சுட வைத்துள்ள பாத்திரம் அல்லது கடாயில் பூரிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.

தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், பூரி மாவை அதில் போட்டுக்கொள்ளவும்.

அவை ஒருபுறம் வெந்ததும் மேலே எழும்பி வரும். பின்னர் அடுத்த பக்கம் அவற்றை திருப்பிப் போட்டுக்கொள்ளவும்.

இந்த முறையில் பூரியை ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும், அவற்றை இட்லி குக்கர் வைத்து அதற்குள் தட்டு வையுங்கள். இல்லையெனில் கடாய்க்குள் தட்டு வைத்து அதில் பூரியை அடுக்கி சூடேற்றவும். பூரி புஸ் என்று பொங்கி வரும்.

அவ்வளவுதான், நீங்கள் எதிர்பார்த்த எண்ணெய் இல்லா பூரி இப்போது தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த குருமாவுடன் சேர்த்து ருசிக்கலாம்.

மல்டிகிரேன் இட்லி மற்றும் இட்லி வகைகள்

 பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி செய்யத் தேவையான பொருட்கள்:



1/2 கப் ராகி மாவு
1/2 கப் பஜ்ரா மாவு
1/2 கப் ஜோவர் மாவு
1/3 கப் முழு கோதுமை மாவு
உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி உப்பு
எண்ணெய்

பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி செய்வது எப்படி?

முதலில் உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தய விதைகளை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.

பிறகு மாவை ஒரு அகலாமான கிண்ணத்தில் மாற்றி, அதில் உப்பு சேர்த்து அனைத்து மாவுகளையும் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து நன்றாக கிளறவும். பின்னர் ஒரே இரவில் புளிக்க மூடி வைக்கவும்.

மாவு புளிக்கவைத்த பிறகு, மாவை மீண்டும் கலக்கவும்.

இப்போது இட்லி அச்சுகளில் முடிந்தவரை சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவிய இட்லி மாவு ஊற்றவும்.

அவற்றை சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதுபோல் செய்துகொள்ளவும்.

பிறகு சாம்பாருடன் சூடாக பரிமாறி ருசிக்கவும்.

கார இட்லி சிம்பிள் செய்முறை:



ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, சிறிது கறிவேப்பிலை மற்றும் கடுகு சேர்க்கவும். அவை வெடிக்கும் வரை வதக்கவும். பிறகு சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து, ஒரு முறை கிளறி, வேகவைத்த இட்லியை அதில் சேர்த்து தாளிக்கவும். இப்போது சூடான மற்றும் காரமான இட்லி தயாராக இருக்கும்.

இட்லி உப்மா:



இந்த இட்லி உப்மா தயார் செய்ய, முதலில் இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் வேண்டும் என்றாலும் சேர்த்து கொள்ளலாம்.

இவையனைத்தையும் நன்றாக வதக்கி பின்னர், முன்னர் உதிர்த்த இட்லிகளை இவற்றுன் சேர்த்து கிளறிக் கொண்டால், சுவையான இட்லி உப்மா தயார்.

இந்த இட்லி வகைகளை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாம் மக்களே!!!

சுவையான சேமியா கஸ்டட்

 தேவையான பொருட்கள் :

சேமியா - 1/2 கப்

நெய் - 1/2 tsp

சர்க்கரை - 1/4 கப்

பால் - 4 கப்

கஸ்டட் - 2 tbsp


திராட்சை, மாதுளை, ஆப்பிள் - விருப்பமான பழ வகைகள்

சப்ஜா விதைகள் - 2 tsp

செய்முறை :

கடாய் வைத்து நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

பின் பாத்திரத்தில் பாலை ஊற்று காய்ச்சுங்கள். நன்கு கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து கலக்குங்கள்.

பின் சர்க்கரை சேர்த்துக் கலந்து 7 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

கொதித்து கொஞ்சம் கெட்டிப் பதத்தில் இருக்கும்போது கஸ்டடை அரை கப் பாலில் கலந்து கொதிக்கும் சேமியாவில் ஊற்றி கலக்குங்கள். மீண்டும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கட்டும்.

பின் அதை நன்கு ஆற வைத்து ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வையுங்கள்.

2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் சப்ஜாவை முதலில் போடுங்கள் அடுத்ததாக சேமியாவை 2 கரண்டி ஊற்றி அதன் மேல் மாதுளை தூவுங்கள்.

மீண்டும் அதன் மேல் சேமியா ஊற்றி பிடித்த பழ வகைகள் சேர்க்கலாம். பின் அதன் மேல் கொஞ்சம் சேமியா தூவி நட்ஸ் வகைகள் சேர்த்து பருகலாம்.

அவ்வளவுதான் சுவையான சேமியா கஸ்டட் தயார்.

வஞ்சரம் மீன் ப்ரை

 தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள் மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை: முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்

பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேப்போல் மீதமுள்ள மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சரம் மீன் ப்ரை ரெடி!!!



சுவையான சராக்கில் பொங்கள்

 


தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 1/2 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப் (நன்கு பொடியாக தட்டியது)
தண்ணீர் - 4 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 12-15
முந்திரி - 8-10
ஏலக்காய் - 2 (தட்டியது)
கிராம்பு - 2 (தட்டியது)
சூடம் - 1 சிட்டிகை (விருப்பமானால்)

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, முதலில் அதிகப்படியான நெருப்பில் வைத்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைவில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும்.

வெல்லமானது நன்கு கரைந்ததும், அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.

பின் குக்கரை திறந்து அதில் வெல்லப் பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து, ஏலக்காய், கிராம்பு மற்றும் சூடத்தை சேர்த்து, பொங்கலை 3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு சிறு வாணலியில் மீதமுள்ள அனைத்து நெய்யையும் ஊற்றி உருகியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி!!!

சத்தான பீட்ரூட் பச்சடி

 பீட்ரூட் பச்சடி செய்யத் தேவையான பொருட்கள்:


பீட்ரூட் – 2 துருவியது

தேங்காய் துருவல் – அரை கப்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
தயிர் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

பீட்ரூட் பச்சடி சிம்பிள் செய்முறை:

ஒரு பாத்திரம் எடுத்து அதில் துருவிய பீட்ரூட், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பிறகு, துருவிய தேங்காய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின், இவற்றை பீட்ரூட் உடன் சேர்த்து கிளறவும். இவற்றை சுமார் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

இவை, நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். இவை கொதித்து வருவதற்கு முன்பு அடுப்பை அணைத்து கீழே இறக்கி விடவும்.

இதன்பிறகு, ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட்டை சேர்க்கவும்.சத்தான பீட்ரூட் பச்சடி தயார். இரத்தம் அதிகரிக்க பீட்ரூட்டை ஜூஸ் அல்லது இதுபோல் பச்சடியாகவோ செய்து கூடங்கள். 

2022ல் பெரிய நெருப்பு விண்கல் வரப்போகிறது.. எழுதி வைத்துவிட்டு போன நாஸ்டர்டாமஸ்.. பெரும் கணிப்பு!

 

2022ல் பெரிய நெருப்பு விண்கல் வரப்போகிறது.. எழுதி வைத்துவிட்டு போன நாஸ்டர்டாமஸ்.. பெரும் கணிப்பு!



சென்னை: 2022ல் உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்று தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.

விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.

கணிப்பு:

ஆனால் சமயங்களில் இவர் கணிப்புகளை புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இவரை பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கூட இவரின் கணிப்புகள் சமயங்களில் குழப்பம் விளைவிப்பவையாக இருக்கும். இருப்பினும் இவரின் பல நூறு கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன.

நாஸ்டர்டாமஸ்:

இந்திய அரசியல் முடிவுகள் குறித்தும் இவர் நிறைய கணிப்புகளை மேற்கொண்டதாக அவ்வப்போது கூறப்படுவது வழக்கம். 9/11 தாக்குதல், அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், லண்டன் தீ விபத்து என்று பல நூறு விஷயங்களை இவர் துல்லியமாக கணித்து இருக்கிறார்.

நாஸ்டர்டாமஸ் 2022:

இந்த நிலையில்தான் 2022ல் நடக்க போகும் விஷயங்கள் என்று இவர் கணித்ததாக இவரின் கவிதைகளில் இருந்து முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்கும். தீ பிளம்பு போன்ற.. முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கல் பூமியை தாக்கும். இதனால் பெரும் சேதங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விண்கல்

அதேபோல் 2002ல் ஏற்பட்டது போல மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பண வீக்கம் ஏற்படும். இதனால் பஞ்சம் ஏற்படும். அமெரிக்க டாலரின் மதிப்பு அதலபாதாளத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய புயல், வெள்ளம் ஏற்படும். இதனால் எதிர்பாராத அழிவு ஏற்படும்.

2022 கணிப்பு

இதன் காரணமாக உலகில் இன்னும் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை கட்டுபடுத்த தொடங்கும். மனிதர்கள் கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவார்கள். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்று அவர் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.p

பிரட் குலோப் ஜாமூன்:

 தேவையான பொருட்கள்: 

பால் பிரட் - 4 துண்டுகள் மைதா - 1 டேபிள் ஸ்பூன் பால் - 1/4 கப் ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள் பொடித்த சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

சர்க்கரை பாகுவிற்கு...

 சர்க்கரை - 1/4 கப் தண்ணீர் - 1/4 கப் குங்குமப்பூ - 1 சிட்டிகை ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை கரையும் வரை சூடேற்ற வேண்டும். நீரில் உள்ள சர்க்கரை முழுவதும் கரைந்து, சர்க்கரைப் பாகு ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். 

சர்க்கரை பாகு குளிர்ந்து வெதுவெதுப்பானதும், அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை எடுத்து அதன் பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் நிற பகுதியை நீக்கிவிட வேண்டும். பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் எடுத்து பாலில் நனைத்து பிழிந்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பிரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சோடா உப்பு, மைதா சேர்த்து கைகளில் ஒட்டாத அளவில் நன்கு மென்மையாக பிசைந்து, பின் அதனை சிறு உருண்டைகளாக மென்மையாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அனைத்து உருண்டைகளையும் பொரித்ததும், அவற்றை சர்க்கரை பாகுவில் சேர்த்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் அந்த உருண்டைகளை எடுத்து, பொடித்த சர்க்கரையில் உருட்டினால், பிரட் ட்ரை குலாப் ஜாமூன் ரெடி!!!



ஜவ்வரிசி போண்டா

 தேவையான பொருட்கள்



ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 1,
புதினா மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், புதினா, இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து., மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசியை 5 மணிநேரம் நீரில் ஊற வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுத்தால் சூடான சுவையான ஜவ்வரிசி போண்டா ரெடி!



சுவையான பால் பணியாரம்

 தேவையான பொருட்கள்:


இட்லி மாவு – ஒரு கப், தேங்காய் – 1, சர்க்கரை – 150 கிராம், ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன், ஆப்ப சோடா மாவு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் பணியாரத்திற்கு தேவைப்படும் தேங்காய் பால் எடுத்து வைக்க வேண்டும். அதற்காக முதலில் ஒரு தேங்காயை உடைத்து, தேங்காய் துருவல் பயன்படுத்தி நன்றாகத் துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் துருவிய தேங்காயை ஒரு கப் அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து, முதலில் தேங்காய் அளந்த அதே கப்பில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வடிகட்டி பயன்படுத்தி தேங்காய் பாலை மட்டும் தனியாக வடிகட்ட வேண்டும். பிறகு மீண்டும் அதே தேங்காயில் முக்கால் கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு, இரண்டாம் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் ஒன்றரை கப் தண்ணீர் மட்டும் ஊற்றி தேங்காய் பால் எடுக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலில் 150 கிராம் சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கப் இட்லி மாவில் அரை ஸ்பூன் ஆப்ப சோடா மாவு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மாவு கெட்டியான பதத்தில் இல்லை என்றால் அதனுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கைகளை பயன்படுத்தி இட்லி மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். இந்த உருண்டைகள் அனைத்தும் நன்றாக பபொறிந்ததும் இவற்றை வேறுதட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அனைத்து மாவையும் உருண்டைகளாக பொரித்து எடுத்த பின்னர் அனைத்து உருண்டைகளையும் தேங்காய் பாலில் சேர்க்கவேண்டும். சிறிது நேரம் இவற்றை அப்படியே ஊறவிட்டு பிறகு சாப்பிடுவதற்கு பரிமாறி கொடுத்தால் போதும். மிகவும் அருமையான சுவையில் சூப்பராக இருக்கும். இதனை குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

சுவையான காரச் சட்னி

 காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:



 தக்காளி - 2, புளி – சிறு கோலிகுண்டு அளவு, பூண்டு பல் – 2, இஞ்சி – ஒரு சிறு துண்டு, வர மிளகாய் – 5, காஷ்மீரி மிளகாய் – 2, கல் உப்பு – தேவையான அளவு, தாளிக்க: நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.
கார சட்னி செய்முறை விளக்கம்:
காரசாரமான இந்த சுவை மிகுந்த கார சட்னி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் நன்கு கழுவி சுத்தம் செய்த இரண்டு பெரிய தக்காளி பழங்களை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு தன்மைக்கு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் காரத்திற்கு வர மிளகாய் 5, காஷ்மீரி மிளகாய் 2 என்கிற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் கூடுதலாக ஒரு மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் நல்ல நிறத்தை கொடுக்கும். பின்னர் இவற்றுடன் தோல் உரித்த பெரிய பல் பூண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இதற்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் எல்லா சட்னி வகைகளுக்கும் தூள் உப்பு சேர்ப்பதை விட, கல் உப்பு சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.மிக்ஸியை இப்போது இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதிற்கு இப்போது சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். தாளிக்க அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். காரம் அதிகம் சேர்த்து செய்யும் கார சட்னி வகைகளுக்கு எப்பொழுதும் நல்லெண்ணெய் ஊற்றுவது தான் சுவையாக இருக்கும்.எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கடுகு போட்டு பொரிய விடுங்கள் கடுகு நன்கு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும், ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்து விடுங்கள். பிறகு காரச் சட்னியுடன் சூடாக அப்படியே கொட்டி நன்கு கலந்து சுடச்சுட இட்லி, தோசை, வடை, பஜ்ஜி, போண்டா, ஆப்பம், உப்புமா போன்றவற்றுக்கு கூட தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். பச்சையாக நாம் எல்லா பொருட்களையும் அரைப்பதால் சூடாக நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொழுது அந்த பச்சை வாசத்தை எடுத்துவிடும், அவ்வளவுதாங்க இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.