async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com

இன்ஸ்டன்ட் ரவா தோசை ரெசிபி:


 இன்ஸ்டன்ட் ரவா தோசை ரெசிபி: 

ரவை – 1 கப்

அரிசி மாவு – 3/4 கப்

மைதா மாவு – 1/4 கப் 

தேங்காய் (துருவியது) – 1 டீஸ்பூன் 

சீரகம் – 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 3

தனியா – 1/4 கப் 

நடுத்தர வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1/2  

உப்பு ( சுவைக்கு ஏற்ப) 

தண்ணீர் – 2 3/4 கப் 

எண்ணெய் 1 டீஸ்பூன் 

நெய் – 1 டீஸ்பூன் 

இன்ஸ்டன்ட் ரவா தோசை செய்வது எப்படி?

முதலில் வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

பின்னர், ஒரு பெரிய கலவை கிண்ணத்தில் ரவா, அரிசி மாவு, மைதா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இவற்றை அப்படியே அரை மணி நேரம் ஒதுக்கி வைக்கவும். 

அரை மணி நேரம் கழித்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு பெரிய நான்-ஸ்டிக் பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய் தடவி, அதை சூடாக்கவும். 

தோசையை அடுத்த பக்கம் திருப்பி வேக வைக்கவும். அரை நிமிடம் வெந்த பிறகு தோசை கரண்டி கொண்டு எடுத்துக்கொள்ளவும். 

இந்த தோசையுடன் சிறிது தேங்காய் சட்னி, கார சட்னி சுவைத்து மகிழலாம். 


கனவிலும் இனி உங்களுடைய முடி கொட்டாது. 10 ரூபாய்க்கு இந்த எண்ணெயை வாங்கி தேய்த்து தான் பாருங்களேன்.

 நம்மில் எல்லோருடைய மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. நிறைய காசு கொடுத்து காஸ்லியான எண்ணெய், ஷாம்பூவை வாங்கி போட்டால் தான் தலை முடி அடர்த்தியாக வளரும் என்று. அப்படி எல்லாம் கிடையாது. இயற்கையாக மலிவாக நமக்கு கிடைக்கக்கூடிய சில பொருட்களில் கூட சத்துக்கள் அதிகம். காசு குறைவு என்பதற்காக அந்த பொருட்களை எல்லாம் நாம் ஒதுக்கி வைக்கின்றோம். அப்படி மலிவாகக் கிடைக்கக்கூடிய, அண்ணாச்சி கடையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பத்து ரூபாய்க்கு அண்ணாச்சி கடையில் வேப்ப எண்ணெய் கிடைக்கும் அல்லவா. வேப்ப எண்ணெயை எத்தனை பேர் தலையில் வைப்போம். பத்தில் ஒருத்தர் கூட இன்று தலைமுடிக்கு வேப்ப எண்ணெயை பயன்படுத்துவது கிடையாது. பின்பு பேன் தொல்லை பொடுகு தொல்லை என்று கெமிக்கல் கலந்த ஷாம்புவை நிறைய காசு கொடுத்து வாங்கி தலையில் போட்டு நல்லா இருக்கும் தலை முடியைக் கூட கொட்ட செய்கின்றோம். சரி வேப்ப எண்ணெயை தலைக்கு எப்படி பயன்படுத்துவது தெரிந்து கொள்வோமா.

வேப்ப எண்ணையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, யாரெல்லாம் இந்த வேப்பெண்ணெயை பயன்படுத்தக்கூடாது என்று தெரிந்துகொள்வோம். ரொம்பவும் உடல் சூடு, உடல் உஷ்ணம் உள்ளவர்கள் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. கர்ப்பமாக இருப்பவர்கள், குழந்தை பிறக்க முயற்சி செய்பவர்கள் வேப்ப எண்ணெய்யை தலைமுடிக்கு பயன்படுத்தக் கூடாது. உங்களுடைய முகத்தில் முகப்பரு அதிகமாக இருக்குமென்றால் முகத்தில் எண்ணெய் வடியும் அளவிற்கு நிறைய வேப்ப எண்ணெயை வைத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான வேப்ப எண்ணெய் 2 ஸ்பூன், சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், இந்த இரண்டு எண்ணெயையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு வேப்பெண்ணெய் கலந்த தேங்காய் எண்ணெயை உங்களுடைய தலையில் ஸ்கால்ப்பில் எல்லா இடத்திலும் படும்படி நன்றாக மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு முடியின் கீழ் பக்கம் வரை இந்த எண்ணெய் தடவினாலும் நல்லது. உங்களுக்கு விருப்பமில்லை. வேப்ப எண்ணெயில் நிறைய வாசம் வருகிறது என்றால் மயிர் கால்களில் மட்டும் நன்றாக எண்ணெய்யை தடவி விடுங்கள்

.முந்தைய நாள் இரவே இந்த எண்ணெயை தடவி விட்டு மறுநாள் காலை நன்றாக ஷாம்பு போட்டு குளித்து விட வேண்டும். வேப்ப எண்ணெயில் வாசம் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முடியின் தடிமனையும் அதிகரிக்க செய்யக் கூடிய சக்தி இந்த எண்ணெய்க்கு உள்ளது. முடி பட்டு பட்டுன்னு உடையும் பிரச்சனையை சரிசெய்ய, முடி ஸ்ட்ராங்காக வளர, இந்த வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். (வெறும் வேப்பெண்ணெயை மட்டும் அப்படியே நேரடியாக தலையில் அப்ளை செய்யாதிங்க. தேங்காய் எண்ணெயோடு கலந்து தான் வேப்பெண்ணையை அப்ளை செய்யவேண்டும்.)

ஒரு முறைக்கு இரண்டு முறை கொஞ்சம் நிறைய ஷாம்புவை போட்டு தலையை அலசினால் தலையில் இருக்கும் வேப்பெண்ணை வாடை சுத்தமாக நீங்கி விடும். வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பெண்ணெயை தலையில் வைக்கலாம். இரவு முழுவதும் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரையாவது வேப்பெண்ணெயை தலையில் வைத்துவிட்டு தலையை அலசிக் கொள்ளுங்கள். நிச்சயம் முடிக்கு நல்லது.



Pallipalayam chicken fry recipe:

 Ingredients :


  • 500 grams chicken with bone
  • 150 grams Indian Shallots (chinna vengayam) (around 15 small onions)
  • 10 cloves garlic
  • 2 tablespoon Coconut Oil
  • 12 dried Red chillies
  • 1 teaspoon Turmeric
  • 5 sprigs Curry leaves
  • 1 teaspoon Salt
  • 1/4 cup coconut, chopped
  • FOR THE GARNISH

    • 2 sprigs Curry leaves
    • 3 sprigs coriander leaves, chopped
    • INSTRUCTIONS

      1. Grind shallots and garlic in a mixie / blender until its a coarse paste.
      2. Heat Oil in a non stick pan. Add in the chopped dried red chillies and add it to the pan. Add in the the ground shallot garlic paste and fry for a minute.
      3. Add in the chicken, curry leaves, turmeric and salt.
      4. Keep the flame on low and keep frying the chicken for 30-40 minutes. The chicken should be totally dry after 40 minutes. Once the chicken has become fully roasted and the dish is dry, switch off the flame.
      5. garnish with fresh curry leaves and the coriander leaves.

Recipe for a Ramadan Special Cooler Drink ‘Jhil-Mil’

 

Ingredients

  • 200 gms Dates(with Seeds)
  • 2 Cups Water(For soakingthe Dates)
  • 150 gms Fresh grated Coconut
  • 450 ml room temperature water(For extracting the Coconut Milk)
  • 6-7 strands of Saffron(soaked in 1 tspn Lukewarm water for 15-20 minutes)
  • 1 Tbspn Sabja(Soaked in ½cup room temperature water for 1 hr)
  • 15 gms Sugarcane Jaggery
  • ½ Tspn Green Cardamom Powder
  • 4-5 Pistachios(chopped fine)
  • 1 Tbspn Pomegranate seed
  • Instructions

    •  De-seed the Dates and keep aside
    •  In a vessel, bring 2 cups of water to a boil and turn the gas flame off
    • Add the de-seeded Dates,Cardamom Powder & Jaggery into the hot water and keep aside to cool.
    • Once the Date Mixture has come down to room temperature, blend the Date mixture into a smooth runny paste.
    • Place a fine Net strainer or Muslin cloth over a vessel and transfer the Date paste into the strainer.
    • Strain this mixture into the same vessel used for soaking the dates
    • In the same mixer Jar, add the fresh grated coconut and 200 ml water, extract thick Coconut milk and using the same fine net strainer, strain the Coconut Milk into the same bowl in which the date mixture in strained
    •  After extracting the Coconut Milk, add the coconut remains back into the mixer jar. Add 250ml water and extract Thin coconut milk and follow the same procedure(you have to extracts Coconut Milk twice, basically)
    •  After extracting the Coconut Milk, add the coconut remains back into the mixer jar. Add 250ml water and extract Thin coconut milk and follow the same procedure(you have to extracts Coconut Milk twice, basically)
    • Add the Saffron water,soaked Sabja seeds, chopped Pistachios and Pomegranate seeds and give it a gentle stir
      • Tuck the bowl into the refrigerator until chilled. You can add some Ice cubes if you wish
      • Once nice and chilled, Our Jhil-Mil cooler is ready to be served

அரிசியே சேர்க்காமல் ஆரோக்கியமான சிறுதானிய அடை தோசை

 முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரகு அரிசி – 1 கப், குதிரைவாலி – 1 கப், துவரம் பருப்பு – 3/4 கப், கடலைப்பருப்பு – 3/4 கப், உளுத்தம்பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக 2 லிருந்து 3 முறை கழுவி விடுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 5 மணி நேரம் இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக ஊற வைக்கவேண்டும்.


இதோடு 8 லிருந்து 10 மிளகாய் உங்களுடைய காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 2 மிளகாய்களை குறைத்துக் கொண்டு, 1 ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்ளலாம். அது இன்னும் ஆரோக்கியம் தரும். (ஊற வைக்கும் பொருட்களோடு சேர்த்து மிளகாயையும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.)

இந்த எல்லாப் பொருட்களும் ஊறிய பின்பு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த பொருட்களோடு அரைக்கும்போது சின்ன வெங்காயம் – 10 பல், சோம்பு – 1 ஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச் அளவு, கறிவேப்பிலை – 1 கொத்து, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அதாவது அடை மாவு 90 சதவிகிதம் வரை பட்டால் தான் நன்றாக இருக்கும். லேசாக கொரகொரப்பாக மாவை அரைத்து எடுத்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

அடை மொத்தமாக சிறியதாக திக்காக வரவேண்டுமென்றால் மாவு கொஞ்சம் திக்காக இருக்கட்டும். தோசை போல மெல்லிசாக வார்க்க வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீரை மாவில் ஊற்றி கரைத்து, தோசை கல்லில் ஊற்றி, நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன் முறுவலாக எடுத்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு வாசனையும், ருசியும் ஆரோக்கியமும் இந்த அடையில் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிப்பி பிடிச்சிருக்கா. மிஸ் பண்ணாதீங்க. இன்னைக்கு ராத்திரி, இல்லை நாளைக்கு காலையில கண்டிப்பா செஞ்சு பாருங்க.

Idly, dosai, chappathi side dish tomato dal

 தக்காளி தால் செய்யத் தேவையான பொருட்கள் :

மசூர் தால் – 1 கப்
தக்காளி – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

தக்காளி தால்  செய்முறை:

முதலில் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைக்கவும்

பிறகு, தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பின்னர், கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க தொடங்கவும்.

அவற்றுடன் தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, முன்னர் வேக வைத்துள்ள பருப்பில் அப்படியே சேர்க்கவும்.

பிறகு அவற்றுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு கீழே இறக்கவும்.

இறுதியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழையை மழைச் சாரல் தூவி பரிமாறி ருசிக்கவும்.

இந்த சூப்பரான தக்காளி தால் தயார் செய்யும் போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அப்படி இருக்கும்.


Pasiparuppu semiya payasam:

 தேவையான பொருட்கள்:

சேமியா – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், சிறு பருப்பு – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், முந்திரி – 10, திராட்சை – 5.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும், தண்ணீர் சற்று சூடானதும் அதில் ஒரு கப் சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ஐந்து நிமிடத்தில் சேமியா நன்றாக வெந்து விடும். பின்னர் தண்ணீரை வடிகட்டி சேமியாவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதே கடாயில் முக்கால் கப் வெல்லத்தை சேர்த்து, அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து, வடிகட்டி வெல்லக் கரைசலையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து, அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, 5 லிருந்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் வெல்லக் கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும்.
பிறகு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை செய்து வைத்துள்ள சேமியா ஸ்வீட்டுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு பலகாரம் தயாராகிவிட்டது. இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

ரவையை வைத்து உப்புமா மட்டுமில்லை இப்படியொரு சூப்பரான டிபனும் பண்ணலாம் தெரியுமா?

 தேவையான பொருட்கள்;

ரவை, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

1. முதலில் ரவையுடன் அதே அளவு கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

2. இப்போது அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

3. அடுத்தது, உப்பு, துருவிய கேரட், மஞ்சள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொண்ட வேண்டும்.

4. பின்பு இந்த கலவையை தண்ணீர் சேர்த்து அடை மாவு பக்குவத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

5. இப்போது அடையையை தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான ரவை அடை தயார்.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் கேரட்டுடன் கூடுதலாக மற்ற காய்கறிகளையும் துருவி சேர்த்து சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான காலை உணவாக இது கட்டாயம் இருக்கும்.


Important samayal tips:

 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மே


லும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.
3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.
5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.
6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் b6 மற்றும் b12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.
7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.
9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.
10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.
11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.
12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.
14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
16. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.
17. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும். ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.

18. "கொள்ளு"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.
19. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது. ஆனால் உடல் வலிமை பெறும்.
20. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்.

Poha(aval) idly


 INGREDIENTS:

  • 1 cup poha / aval / avalakki / atukulu / flattened rice (thick)
  • 1 cup curd
  • 1½ cup rice rava / idli rava
  • ¾ tsp salt
  • 2 cup water (as required)
  • ¾ tsp eno / fruit salt
  • INSTRUCTIONS:
     

    • firstly, in a small mixi grind 1 cup poha to a coarse powder. i have used thick variety poha, if you are using thin then increase the quantity of poha.
    • add 1 cup curd and mix well. make sure to poha absorbs curd.
    • further, add 1½ cup rice rava and mix well. you can alternatively, use upma rava and mix well.
    • now add ¾ tsp salt and 1 cup water.
    • mix well making sure everything is well combined adding water as required.
    • cover and rest for 30 minutes or until the rava and poha absorb water.
    • after 30 minutes, mix gently, making sure the rava has absorbed water.
    • now add ½ cup water and mix well adjusting the consistency.
    • just before steaming, add ¾ tsp eno and mix gently until the batter turns frothy.
    • now pour the batter into greased idli plate.
    • steam the idli for 15 minutes or until the idli is cooked well.
    • finally, enjoy poha idli with coriander mint chutney.

சுகர் பிரச்னைக்கு ஓமம்:

 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓமம் சிறந்தது



உணவுக்குப் பிறகு ஓமம் தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் உங்களுக்கு ஒரு டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் நான்கில் ஒரு பங்கு இலவங்கப்பட்டை தூள் தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேநீர் காய்ச்சவும். நீங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இதை உட்கொள்ளுங்கள். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைவதாகக் கூறப்படுகிறது,”

அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்

அசிடிட்டி, வாயு மற்றும் வீக்கம் மட்டுமல்ல, ஓம விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவும். ஓம விதைகளை மென்று சாப்பிடுவது அமிலத்தன்மையை குறைக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைப்பது நமது உணவை உடைக்க அதிக செரிமான நொதிகள் மற்றும் வயிற்று அமிலங்களை சுரக்க உதவும். இதற்கு ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை கொதிக்கும் நீரில் சேர்ந்து அந்த நீரை குடிப்பதுசெரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் வயிற்று அமிலங்கள் மற்றும் செரிமான அமைப்பை தளர்த்தி, உங்கள் குடல் சுவர்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்

உங்கள் பிள்ளைக்கு அடிவயிற்றில் கடுமையான வலி அல்லது குடல் அடைப்பு காரணங்களால் அவதிப்பட்டால் நீங்கள் ஓமம் தண்ணீர் அல்லது சில ஓம விதைகளை மெல்ல கொடுக்கலாம். இது உடனடி தீர்வை கொடுக்கும்.

குடற்புழு நீக்கத்தில் உதவும்

ஓமத்தை (1 டீஸ்பூன்) சிறிது வெல்லத்துடன் (1 டீஸ்பூன்) கலக்கவும். இந்த கலவையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை குடற்புழு நீக்கத்திற்கான ஒரு பொதுவான தீர்வாகும். வெல்லம் புழுவை வெளியே வர ஈர்க்கிறது மற்றும் ஓமம் வயிற்று அமிலத்துடன் கலந்து புழுக்களை அழிக்க உதவுகிறது.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உதவும்

ஓமம் டீயுடன் தேன் சேர்த்து பருகினால் ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இது இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஓமத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.