async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: Idly, dosai, chappathi side dish tomato dal

Idly, dosai, chappathi side dish tomato dal

 தக்காளி தால் செய்யத் தேவையான பொருட்கள் :

மசூர் தால் – 1 கப்
தக்காளி – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

தக்காளி தால்  செய்முறை:

முதலில் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைக்கவும்

பிறகு, தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பின்னர், கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க தொடங்கவும்.

அவற்றுடன் தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, முன்னர் வேக வைத்துள்ள பருப்பில் அப்படியே சேர்க்கவும்.

பிறகு அவற்றுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு கீழே இறக்கவும்.

இறுதியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழையை மழைச் சாரல் தூவி பரிமாறி ருசிக்கவும்.

இந்த சூப்பரான தக்காளி தால் தயார் செய்யும் போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அப்படி இருக்கும்.


No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog