async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: அரிசியே சேர்க்காமல் ஆரோக்கியமான சிறுதானிய அடை தோசை

அரிசியே சேர்க்காமல் ஆரோக்கியமான சிறுதானிய அடை தோசை

 முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரகு அரிசி – 1 கப், குதிரைவாலி – 1 கப், துவரம் பருப்பு – 3/4 கப், கடலைப்பருப்பு – 3/4 கப், உளுத்தம்பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக 2 லிருந்து 3 முறை கழுவி விடுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 5 மணி நேரம் இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக ஊற வைக்கவேண்டும்.


இதோடு 8 லிருந்து 10 மிளகாய் உங்களுடைய காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 2 மிளகாய்களை குறைத்துக் கொண்டு, 1 ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்ளலாம். அது இன்னும் ஆரோக்கியம் தரும். (ஊற வைக்கும் பொருட்களோடு சேர்த்து மிளகாயையும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.)

இந்த எல்லாப் பொருட்களும் ஊறிய பின்பு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த பொருட்களோடு அரைக்கும்போது சின்ன வெங்காயம் – 10 பல், சோம்பு – 1 ஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச் அளவு, கறிவேப்பிலை – 1 கொத்து, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அதாவது அடை மாவு 90 சதவிகிதம் வரை பட்டால் தான் நன்றாக இருக்கும். லேசாக கொரகொரப்பாக மாவை அரைத்து எடுத்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

அடை மொத்தமாக சிறியதாக திக்காக வரவேண்டுமென்றால் மாவு கொஞ்சம் திக்காக இருக்கட்டும். தோசை போல மெல்லிசாக வார்க்க வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீரை மாவில் ஊற்றி கரைத்து, தோசை கல்லில் ஊற்றி, நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன் முறுவலாக எடுத்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு வாசனையும், ருசியும் ஆரோக்கியமும் இந்த அடையில் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிப்பி பிடிச்சிருக்கா. மிஸ் பண்ணாதீங்க. இன்னைக்கு ராத்திரி, இல்லை நாளைக்கு காலையில கண்டிப்பா செஞ்சு பாருங்க.

1 comment:

  1. https://youtu.be/xHEigaD0f4c please subscribe my channel and share to your relatives and support me

    ReplyDelete

Thank you for reading our articles follow my blog