async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: Pasiparuppu semiya payasam:

Pasiparuppu semiya payasam:

 தேவையான பொருட்கள்:

சேமியா – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், சிறு பருப்பு – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், முந்திரி – 10, திராட்சை – 5.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும், தண்ணீர் சற்று சூடானதும் அதில் ஒரு கப் சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ஐந்து நிமிடத்தில் சேமியா நன்றாக வெந்து விடும். பின்னர் தண்ணீரை வடிகட்டி சேமியாவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதே கடாயில் முக்கால் கப் வெல்லத்தை சேர்த்து, அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து, வடிகட்டி வெல்லக் கரைசலையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து, அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, 5 லிருந்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் வெல்லக் கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும்.
பிறகு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை செய்து வைத்துள்ள சேமியா ஸ்வீட்டுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு பலகாரம் தயாராகிவிட்டது. இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog