தேவையானவை:
கத்தரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 6
மிளகாய் – 2
பூண்டு – 10
தேங்காய் – சில்
உப்பு, மஞ்சள் – தேவைக்கு ஏற்ப
தக்காளி – 4
செய்முறை:
1/4 கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம் 6, சிறிய மிளகாய்-2, உரித்த பூண்டு 10 பல், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதில் கத்திரிக்காயை கழுவி போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேக வைத்து இரண்டு சில் தேங்காயை அரைத்து பால் ஊற்றி குக்கரை மூடி 5 நிமிடம் வைத்திருந்து பின் திறந்து, சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை நனைய வைத்து கரைத்து ஊற்றி குழம்பு நன்றாக கொதித்து, கத்தரிக்காய் வெந்தது பார்த்து எண்ணெய் தெளிய இறக்கவும்.

No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog