async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: How to make tasty chettinad white muruku

How to make tasty chettinad white muruku

 தேவையான பொருள்கள்:



 பச்சரிசி                             –   1 கிலோ

உழுந்தம் பருப்பு           –   250 கிராம்

சீரகம் அல்லது எள்        –   1 மேஜைக்கரண்டி

உப்பு                               –    தேவையானது

வெண்ணெய்                –    1 மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்      –  ½ லிட்டர் 

செய்முறை:

  பச்சரிசியை நனைய வைத்து உரலில்

 இடித்து கப்பியில்லாமல் நைஸாக சலித்துக்

 கொள்ளவும். உளுந்தம் பருப்பை லேசாக

 வறுத்து திரித்துக்கொள்ளவும். 

 சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து

 மாவுகளுடன் கலக்க வேண்டும். உப்பை சிறி

து தண்ணீர் விட்டுக் கரைத்து மாவில் விட்டு

 கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து

 கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு

 முறுக்கு குழலில் 3 துவாரமுள்ள அச்சைப்

 போட்டு மாவைக் குழலினுள் வைத்து,

 எண்ணெயில் சிறு சிறு வட்டங்களாகப்

 பிழிந்து இரு பக்கங்களும் நன்றாக வெந்து

 சத்தம் நின்றதும் கம்பியால் எடுக்கவும்.

ஒரு தடவை 4 அல்லது 5 முறுக்கு சுடலாம்

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog