async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com

Pasiparuppu semiya payasam:

 தேவையான பொருட்கள்:

சேமியா – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், சிறு பருப்பு – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், முந்திரி – 10, திராட்சை – 5.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும், தண்ணீர் சற்று சூடானதும் அதில் ஒரு கப் சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ஐந்து நிமிடத்தில் சேமியா நன்றாக வெந்து விடும். பின்னர் தண்ணீரை வடிகட்டி சேமியாவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதே கடாயில் முக்கால் கப் வெல்லத்தை சேர்த்து, அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து, வடிகட்டி வெல்லக் கரைசலையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து, அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, 5 லிருந்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் வெல்லக் கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும்.
பிறகு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை செய்து வைத்துள்ள சேமியா ஸ்வீட்டுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு பலகாரம் தயாராகிவிட்டது. இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

ரவையை வைத்து உப்புமா மட்டுமில்லை இப்படியொரு சூப்பரான டிபனும் பண்ணலாம் தெரியுமா?

 தேவையான பொருட்கள்;

ரவை, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

1. முதலில் ரவையுடன் அதே அளவு கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

2. இப்போது அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

3. அடுத்தது, உப்பு, துருவிய கேரட், மஞ்சள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொண்ட வேண்டும்.

4. பின்பு இந்த கலவையை தண்ணீர் சேர்த்து அடை மாவு பக்குவத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

5. இப்போது அடையையை தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான ரவை அடை தயார்.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் கேரட்டுடன் கூடுதலாக மற்ற காய்கறிகளையும் துருவி சேர்த்து சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான காலை உணவாக இது கட்டாயம் இருக்கும்.


Important samayal tips:

 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மே


லும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.
3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.
5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.
6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் b6 மற்றும் b12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.
7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.
9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.
10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.
11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.
12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.
14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
16. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.
17. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும். ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.

18. "கொள்ளு"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.
19. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது. ஆனால் உடல் வலிமை பெறும்.
20. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்.

Poha(aval) idly


 INGREDIENTS:

  • 1 cup poha / aval / avalakki / atukulu / flattened rice (thick)
  • 1 cup curd
  • 1½ cup rice rava / idli rava
  • ¾ tsp salt
  • 2 cup water (as required)
  • ¾ tsp eno / fruit salt
  • INSTRUCTIONS:
     

    • firstly, in a small mixi grind 1 cup poha to a coarse powder. i have used thick variety poha, if you are using thin then increase the quantity of poha.
    • add 1 cup curd and mix well. make sure to poha absorbs curd.
    • further, add 1½ cup rice rava and mix well. you can alternatively, use upma rava and mix well.
    • now add ¾ tsp salt and 1 cup water.
    • mix well making sure everything is well combined adding water as required.
    • cover and rest for 30 minutes or until the rava and poha absorb water.
    • after 30 minutes, mix gently, making sure the rava has absorbed water.
    • now add ½ cup water and mix well adjusting the consistency.
    • just before steaming, add ¾ tsp eno and mix gently until the batter turns frothy.
    • now pour the batter into greased idli plate.
    • steam the idli for 15 minutes or until the idli is cooked well.
    • finally, enjoy poha idli with coriander mint chutney.

சுகர் பிரச்னைக்கு ஓமம்:

 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓமம் சிறந்தது



உணவுக்குப் பிறகு ஓமம் தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் உங்களுக்கு ஒரு டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் நான்கில் ஒரு பங்கு இலவங்கப்பட்டை தூள் தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேநீர் காய்ச்சவும். நீங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இதை உட்கொள்ளுங்கள். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைவதாகக் கூறப்படுகிறது,”

அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்

அசிடிட்டி, வாயு மற்றும் வீக்கம் மட்டுமல்ல, ஓம விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவும். ஓம விதைகளை மென்று சாப்பிடுவது அமிலத்தன்மையை குறைக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைப்பது நமது உணவை உடைக்க அதிக செரிமான நொதிகள் மற்றும் வயிற்று அமிலங்களை சுரக்க உதவும். இதற்கு ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை கொதிக்கும் நீரில் சேர்ந்து அந்த நீரை குடிப்பதுசெரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் வயிற்று அமிலங்கள் மற்றும் செரிமான அமைப்பை தளர்த்தி, உங்கள் குடல் சுவர்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்

உங்கள் பிள்ளைக்கு அடிவயிற்றில் கடுமையான வலி அல்லது குடல் அடைப்பு காரணங்களால் அவதிப்பட்டால் நீங்கள் ஓமம் தண்ணீர் அல்லது சில ஓம விதைகளை மெல்ல கொடுக்கலாம். இது உடனடி தீர்வை கொடுக்கும்.

குடற்புழு நீக்கத்தில் உதவும்

ஓமத்தை (1 டீஸ்பூன்) சிறிது வெல்லத்துடன் (1 டீஸ்பூன்) கலக்கவும். இந்த கலவையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை குடற்புழு நீக்கத்திற்கான ஒரு பொதுவான தீர்வாகும். வெல்லம் புழுவை வெளியே வர ஈர்க்கிறது மற்றும் ஓமம் வயிற்று அமிலத்துடன் கலந்து புழுக்களை அழிக்க உதவுகிறது.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உதவும்

ஓமம் டீயுடன் தேன் சேர்த்து பருகினால் ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இது இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஓமத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Covid-19: Five food habits to strengthen your immune system

 

Dr Siddhant Bhargava, Fitness and Nutritional Scientist, said, " a healthy, balanced diet directly affects the way we feel and how our body functions.



"He explained that a healthy, balanced diet directly affects the way we feel and also how the body functions. “In the face of current health challenges, these tips will help protect you and your loved ones in the fight to stay Covid-free”, the expert added.

Mentioned below are some healthy eating habits, according to Dr Bhargava, to sail you through these challenging times:

*Eat a variety of fruits and vegetables – Opt for a variety of fruits and vegetables that offer loads of vitamins, minerals and fibre. One can also use them to prepare a large batch of soups, stews or other dishes, as per preference and taste.

*Consume pulses and nuts – Whole grains, pulses, nuts and healthy fats support the immune system and help in reducing inflammation. An inexpensive source of protein, pulses are full of vitamins and minerals that can help reduce the risk of diseases like diabetes and coronary conditions. “Increase the intake of olive, sesame, peanuts and other unsaturated oils”, Dr Bhargava said.

*Limit fats, sugar and salt – In times of high stress, such as during a pandemic, do not turn towards comfort food that is high in fat, sugar, salt and calories. “Managing fats, sugar and salt in the body can keep you healthy and reduce the risk of chronic diseases like heart disease, stroke, type 2 diabetes and chronic kidney disease”, he said.

*Immunity boosting drinks – Prepare fresh, immunity boosting drinks at home using ginger, apple cider vinegar, granola fruit smoothie, and kadha. These drinks are not only delicious but exceptionally healthy, fulfilling and rejuvenating.

*Regular physical activity– It is important to exercise daily to keep yourself physically and mentally healthy. The aim must be at least 30-60 minutes of daily exercise depending on your age, fitness, diet and lifestyle.

“Eat a variety of food to ensure a balanced diet, include micronutrient-rich foods in the diets of elderly people, seek guidance on what constitutes healthy portions for adults and young children to avoid overeating and prevent obesity. Also, adopt the right pre-cooking processes and appropriate cooking methods”, the expert said in conclusion.

https://myshopprime.com/collections/394968360 anyone want this nighty purchase through this link  click the link and press open and go and purchase 



Super remedy for cholesterol and heart attack

 Take one bowl pour 1glass water and put 10 black dry grapes and chopped  1inch ginger and put the bowl in the stove  boil it for 10minutes and switch off the stove and put the green tea pack in the boiled Water close it for 10minutes and strain the water and add honey and take this drinks  before  eating  food it is very good drinks for cholesterol and clear blood  circulation. All of you try this drinks and get improvement in our body. 


வெண்டைக்காய் பக்கோடா

 தேவையான பொருட்கள்


வெண்டைக்காய் - ¼ கிலோ
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
உப்பு - தேவைக்கு
மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
மல்லி துாள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
சீரக துாள் - ½ டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காயை சுத்தமாக கழுவி, நீர் துடைத்து விட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.

முந்திரி பருப்பு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில், உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, மல்லி துாள், சீரக துாள் சேர்த்து, சில துளிகள் நீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

இதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நீரை வடித்து விட்டு முந்திரி, ஒன்றிரண்டாகத் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்த பின், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு சேர்த்து, பக்கோடாவிற்கு பிசைவது போல பிசையவும்.

எதையும் நொறுக்கி விடாமல், மசாலா சீராக கலக்கும் விதமாக மென்மையாக பிசையவும்.

அதன்பின், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து பிரட்டி, சில நிமிடங்கள் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிரட்டி வைத்த வெண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

நன்கு ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், மொறுமொறுவென்று இருக்கும்.

இப்போது சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

Kerala dish neer dosai

 தேவையான பொருட்கள்:


அரிசி மாவு – 2 கப், பால் – ஒரு கப், உப்பு – 2 ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 2 பல், புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 5, பொட்டுக்கடலை – 3 ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

கிரீன் சட்னி:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காயை கொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும் பின்னர் அதனுடன் ஒரு குத்து புதினா தழை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும் பிறகு இவற் றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.

நீர் தோசை செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் அல்லது ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மாவினை நன்றாக கரைக்க வேண்டும்.

இந்த அரிசி மாவு கலவை எப்பொழுதும் தோசை சுடும் தோசை மாவு பக்குவத்தில் விட சற்றுக் கூடுதலான தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல் வைத்து, தோசை ஊற்றி, அதன்மீது எண்ணெய் ஊற்றி தோசை சிவந்து வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த நீர் தோசையுடன் செய்து வைத்துள்ள கிரீன் சட்னி சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். இதன் சுவை நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் உங்கள் நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு அருமையாக இருக்கும்

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் சுவையான கிரீன் சட்னி தயாராகிவிடும்.


Important samayal tips:

 சமையல் டிப்ஸ்.:

காலையில் வாங்கிய பால் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்க. பாலை காய்ச்சியதும் அதனுடன் சில நெல்மணிகளை நன்றாக அலசிப் போட்டு வைத்தால் பால் கெட்டுப் போகாது. புளிசாதம் செய்யும்போது சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து சாதத்தில் கலந்தால் சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன், உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவிய பின் மோரில் சிறிது நேரம் ஊறவிட்டு வடியவிட்டு எடுத்துப் பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும். மோர்க்குழம்பு செய்யும்போது சிறிது ஓமம் வைத்து அரைத்தால் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். தேன்குழல் செய்யும்போது தண்ணீருக்குப் பதிலாகச் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் சுவை கூடுவதோடு, வெண்மை நிறத்தில் இருக்கும். தோசை வார்க்கும்போது ஒட்டிக் கொண்டால் கல்லில் சிறிது பொடி உப்பைத் தூவி தேய்த்துவிட்டுப் பிறகு வார்த்தால் தோசை ஒட்டாமல் வரும். இட்லி மென்மையாக வராமல் இருந்தால் கொள்ளை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து வார்த்தால் இட்லி புசு புசு வெனகிடைக்கும். வற்றல் குழம்பு, மிளகுக்குழம்பு செய்தவுடன் அப்பளம் பொரித்து சின்னசின்ன துண்டங்களாக போட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். எந்த பொரியல் செய்தாலும் அதில் சிறிது கடலை மாவைத் தூவி ஐந்து நிமிடம் லேசாக கொதிக்க வைத்து இறக்கினால் பொரியல் நல்ல வாசனையாக இருக்கும்.
சமையலறையில் கூடுமானவரை பெண்கள் இரும்பு பாத்திரத்தை சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இரும்பு தோசைக்கல், இரும்பு கடாய், இரும்பு சட்டி போன்ற பாத்திரங்களில் தினம்தோறும் சமைக்கும் பழக்கத்தை கொண்டுவரும் போது உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல முடிந்தவரை ப்ளாஸ்டிக் டப்பாக்களை சமையலறையில் பயன்படுத்தும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் குளிர்சாதன பெட்டியை வைக்க வேண்டாம். சமையலறை பக்கத்திலோ அல்லது டைனிங் ஹாலில் குளிர்சாதனப் பெட்டியை வைப்பது சாஸ்திர ரீதியாக நல்லது.
இதேபோல ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலை அசுத்தமாக இருந்தால் அதனுடைய பாதிப்பு அந்த வீட்டில் இருக்கும் பெண்களையே சேரும். பெண்களின் மனதும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் முன்னேற்றமும் தடைபடும். வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

நாம் எல்லோரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய கிச்சன் டிப்ஸ்...

1. சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

2. ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.

3. முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும்.

4. இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும். 

5. சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.

6. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கும் உப்பியும் வரும்.

7. வெண்டைக்காயயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும். சாப்பிடுவதற்கும் மொறு மொறுவென்று இருக்கும்...

8. பூண்டின் தோலை சுலபமாக உரிக்க அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை ஆப் பண்ணி விட்டு தேவையான பூண்டு பற்களை போட்டு கிளறி மூடி வைத்து விடவும். 10 நிமிடம் ஆனதும் எடுத்து உரித்தால் சுலபமாக தோல் வந்து விடும்.

9. ரவா தோசை சுடும் போது மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

10. தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.


உங்கள் உணவில் உப்பு அதிகமாகி விட்டதா? அதை சமநிலைப்படுத்த சில எளிய வழிகள் இங்கே!

 

உங்கள் உணவில் உப்பு அதிகமாகி விட்டதா? அதை சமநிலைப்படுத்த சில எளிய வழிகள் இங்கே!



உப்பு இல்லாத ஒரு உணவை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதேபோல, அதிகப்படியான உப்பு, உணவை சுவையற்றதாக ஆக்குகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதால் இது ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது. ஆனால் உங்கள் உணவில் தவறுதலாக அதிக உப்பைச் சேர்த்துவிட்டு, “இப்போது நான் என்ன செய்வது?” என்று யோசித்த நேரங்கள் இருக்கலாம்.

இந்த சங்கடத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், உங்கள் உணவில் உள்ள அதிகப்படியான உப்பைச் சமப்படுத்த உதவும் சில எளிய தீர்வுகள் இங்கே உள்ளன.

தண்ணீர் சேர்க்கவும்

உங்கள் கிரேவியில் அதிக உப்பு உள்ளதா? அதை நடுநிலையாக்குவதற்கான சிறந்த மற்றும் எளிதான வழி, கிரேவியில் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைப்பதாகும். ஆனால் நீங்கள் சேர்க்கும் தண்ணீரின் அளவைக் கவனிக்கவும்.

சிறிய மாவு உருண்டைகளை உருட்டி, அதிகப்படியான உப்பு இருக்கும் கறியில் சேர்க்கவும். நீங்கள் அதை சுமார் 10-15 நிமிடங்கள் வைத்திருந்தால், மாவு உருண்டைகள்’ டிஷிலிருந்து அதிகப்படியான உப்பை ஊறிஞ்சிவிடும். இருப்பினும், பரிமாறும் முன் அவற்றை வெளியே எடுக்க மறக்காதீர்கள்.

தயிர்; உங்கள் கறியில் 1-2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது மலாய் சேர்த்தால், அது கூடுதல் உப்பைக் குறைக்கலாம்.

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் வாழைப்பூ போண்டா

 தேவையான பொருள்கள் :

உளுந்து - கால் கிலோ
வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
கறிவேப்பிலை - ஓரு கொத்து
தேங்காய்ப்பூ - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

தேங்காயுடன், மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காயவைத்து, பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான வாழைப்பூ போண்டா தயார்.

சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.