async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: Important samayal tips:

Important samayal tips:

 சமையல் டிப்ஸ்.:

காலையில் வாங்கிய பால் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்க. பாலை காய்ச்சியதும் அதனுடன் சில நெல்மணிகளை நன்றாக அலசிப் போட்டு வைத்தால் பால் கெட்டுப் போகாது. புளிசாதம் செய்யும்போது சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து சாதத்தில் கலந்தால் சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன், உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவிய பின் மோரில் சிறிது நேரம் ஊறவிட்டு வடியவிட்டு எடுத்துப் பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும். மோர்க்குழம்பு செய்யும்போது சிறிது ஓமம் வைத்து அரைத்தால் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். தேன்குழல் செய்யும்போது தண்ணீருக்குப் பதிலாகச் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் சுவை கூடுவதோடு, வெண்மை நிறத்தில் இருக்கும். தோசை வார்க்கும்போது ஒட்டிக் கொண்டால் கல்லில் சிறிது பொடி உப்பைத் தூவி தேய்த்துவிட்டுப் பிறகு வார்த்தால் தோசை ஒட்டாமல் வரும். இட்லி மென்மையாக வராமல் இருந்தால் கொள்ளை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து வார்த்தால் இட்லி புசு புசு வெனகிடைக்கும். வற்றல் குழம்பு, மிளகுக்குழம்பு செய்தவுடன் அப்பளம் பொரித்து சின்னசின்ன துண்டங்களாக போட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். எந்த பொரியல் செய்தாலும் அதில் சிறிது கடலை மாவைத் தூவி ஐந்து நிமிடம் லேசாக கொதிக்க வைத்து இறக்கினால் பொரியல் நல்ல வாசனையாக இருக்கும்.
சமையலறையில் கூடுமானவரை பெண்கள் இரும்பு பாத்திரத்தை சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இரும்பு தோசைக்கல், இரும்பு கடாய், இரும்பு சட்டி போன்ற பாத்திரங்களில் தினம்தோறும் சமைக்கும் பழக்கத்தை கொண்டுவரும் போது உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல முடிந்தவரை ப்ளாஸ்டிக் டப்பாக்களை சமையலறையில் பயன்படுத்தும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் குளிர்சாதன பெட்டியை வைக்க வேண்டாம். சமையலறை பக்கத்திலோ அல்லது டைனிங் ஹாலில் குளிர்சாதனப் பெட்டியை வைப்பது சாஸ்திர ரீதியாக நல்லது.
இதேபோல ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலை அசுத்தமாக இருந்தால் அதனுடைய பாதிப்பு அந்த வீட்டில் இருக்கும் பெண்களையே சேரும். பெண்களின் மனதும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் முன்னேற்றமும் தடைபடும். வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog