async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: Tasty and yummy onion samosa

Tasty and yummy onion samosa

 


மொறு மொறு சமோசா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. மாவு - 200 கிராம் 
  2.  உருளைக்கிழங்கு - 2 
  3.  வெங்காயம் - 2
  4.  சீரகம் - ஒரு தேக்கரண்டி
  5.  மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
  6.  எண்ணெய் - தேவையான 
  7. அளவு உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

  8. ஒரு பாத்திரத்தில் மாவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும். 
  9. உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். 
  10. பிறகு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். 
  11. அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

     உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை தட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து கூம்பு போல் செய்து கொள்ளவும். 

     அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

  12. இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும். ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். 

     இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா ரெடி.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog