async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: December 2021

ஜவ்வரிசி போண்டா

 தேவையான பொருட்கள்



ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 1,
புதினா மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், புதினா, இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து., மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசியை 5 மணிநேரம் நீரில் ஊற வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுத்தால் சூடான சுவையான ஜவ்வரிசி போண்டா ரெடி!



சுவையான பால் பணியாரம்

 தேவையான பொருட்கள்:


இட்லி மாவு – ஒரு கப், தேங்காய் – 1, சர்க்கரை – 150 கிராம், ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன், ஆப்ப சோடா மாவு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை:
முதலில் பணியாரத்திற்கு தேவைப்படும் தேங்காய் பால் எடுத்து வைக்க வேண்டும். அதற்காக முதலில் ஒரு தேங்காயை உடைத்து, தேங்காய் துருவல் பயன்படுத்தி நன்றாகத் துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் துருவிய தேங்காயை ஒரு கப் அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து, முதலில் தேங்காய் அளந்த அதே கப்பில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வடிகட்டி பயன்படுத்தி தேங்காய் பாலை மட்டும் தனியாக வடிகட்ட வேண்டும். பிறகு மீண்டும் அதே தேங்காயில் முக்கால் கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு, இரண்டாம் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் ஒன்றரை கப் தண்ணீர் மட்டும் ஊற்றி தேங்காய் பால் எடுக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலில் 150 கிராம் சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கப் இட்லி மாவில் அரை ஸ்பூன் ஆப்ப சோடா மாவு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மாவு கெட்டியான பதத்தில் இல்லை என்றால் அதனுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கைகளை பயன்படுத்தி இட்லி மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். இந்த உருண்டைகள் அனைத்தும் நன்றாக பபொறிந்ததும் இவற்றை வேறுதட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அனைத்து மாவையும் உருண்டைகளாக பொரித்து எடுத்த பின்னர் அனைத்து உருண்டைகளையும் தேங்காய் பாலில் சேர்க்கவேண்டும். சிறிது நேரம் இவற்றை அப்படியே ஊறவிட்டு பிறகு சாப்பிடுவதற்கு பரிமாறி கொடுத்தால் போதும். மிகவும் அருமையான சுவையில் சூப்பராக இருக்கும். இதனை குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

சுவையான காரச் சட்னி

 காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:



 தக்காளி - 2, புளி – சிறு கோலிகுண்டு அளவு, பூண்டு பல் – 2, இஞ்சி – ஒரு சிறு துண்டு, வர மிளகாய் – 5, காஷ்மீரி மிளகாய் – 2, கல் உப்பு – தேவையான அளவு, தாளிக்க: நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.
கார சட்னி செய்முறை விளக்கம்:
காரசாரமான இந்த சுவை மிகுந்த கார சட்னி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் நன்கு கழுவி சுத்தம் செய்த இரண்டு பெரிய தக்காளி பழங்களை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு தன்மைக்கு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் காரத்திற்கு வர மிளகாய் 5, காஷ்மீரி மிளகாய் 2 என்கிற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் கூடுதலாக ஒரு மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் நல்ல நிறத்தை கொடுக்கும். பின்னர் இவற்றுடன் தோல் உரித்த பெரிய பல் பூண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இதற்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் எல்லா சட்னி வகைகளுக்கும் தூள் உப்பு சேர்ப்பதை விட, கல் உப்பு சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.மிக்ஸியை இப்போது இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதிற்கு இப்போது சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். தாளிக்க அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். காரம் அதிகம் சேர்த்து செய்யும் கார சட்னி வகைகளுக்கு எப்பொழுதும் நல்லெண்ணெய் ஊற்றுவது தான் சுவையாக இருக்கும்.எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கடுகு போட்டு பொரிய விடுங்கள் கடுகு நன்கு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும், ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்து விடுங்கள். பிறகு காரச் சட்னியுடன் சூடாக அப்படியே கொட்டி நன்கு கலந்து சுடச்சுட இட்லி, தோசை, வடை, பஜ்ஜி, போண்டா, ஆப்பம், உப்புமா போன்றவற்றுக்கு கூட தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். பச்சையாக நாம் எல்லா பொருட்களையும் அரைப்பதால் சூடாக நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொழுது அந்த பச்சை வாசத்தை எடுத்துவிடும், அவ்வளவுதாங்க இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

உருளைக்கிழங்கு கிரேவி

 தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு - 4


எண்ணெய் - 2 tsp

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 1

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 2

சோம்பு - 1/2 tsp

பிரியாணி இலை - 1

தக்காளி - 2

மஞ்சள் பொடி - 1/2 tsp

மிளகாய் பொடி - 1 tsp

கரம் மசாலா - 1 tsp

தனியா பொடி - 1 tsp

உப்பு - தே . அ

செய்முறை :

இந்த கிரேவியை முற்றிலும் குக்கரில் தான் செய்ய வேண்டும். எனவே குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றுங்கள்.

காய்ந்ததும் பட்டை, இலை, ஏலக்காய் போடுங்கள். பொறிந்ததும் இஞ்சி , வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் தக்காளி சேருங்கள். பின் மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , தனியா பொடி , கரம் மசாலா பொடி சேர்த்து வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேருங்கள்.தற்போது உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றுங்கள்.

உப்பு சரி பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போடுங்கள். 4 -5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

குக்கர் பிரஷர் தானாக வெளியேறும் வரை காத்திருங்கள். காற்று வெளியேறியதும் மூடியைத் திறந்து காரம் சுவை சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போதுமான கெட்டிப்பதம் இருந்தால் கிண்ணத்தில் மாற்றி பறிமாறுங்கள். இல்லையெனில் சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.சுவையான உருளைக்கிழங்கு கிரேவி ரெடி. 

வெஜிடேபில் சேமியா

 செய்முறை:


முதலில் ஒரு பாக்கெட் சேமியாவை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அந்த சேமியா மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிடுங்கள். சுடு தண்ணீர் ஊற்ற வேண்டாம். சாதாரணமாக பச்சைத் தண்ணீர் ஊற்றினாலே போதும். 10 நிமிடங்கள் ஊறிய சேமியாவை தண்ணீரில் இருந்து நன்றாக பிழிந்து எடுத்து இட்லி பாத்திரத்தில், இட்லி தட்டின் மேல் வைத்து 10 நிமிடம் போல ஆவியில் வேக வைத்து விடுங்கள். வேக வைத்த சேமியா அப்படியே தனியாக இருக்கட்டும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பட்டாணி, கேரட், பீன்ஸ், தக்காளி – 1 பொடியாக நறுக்கியது சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு இந்த பொருட்களை எல்லாம் வதக்கி காய்களை வேக வைத்துக் கொள்ளுங்கள்.அதன்பின்பு கரம்மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சேர்த்து 2 முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு நிமிடம் போல நன்றாக கலந்துவிட வேண்டும். முட்டை பாதி வெந்தவுடன் ஆவியில் வேக வைத்திருக்கும் சேமியாவை கடாயில் இருக்கும் மசாலா பொருட்களோடு போட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி, 2 நிமிடம் போல கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.அதன் பின்பு சுடசுட இந்த சேமியா உப்புமாவை பரிமாறி பாருங்கள். நிச்சயமாக இப்படி சேமியா உப்புமா செய்தால் குழைந்து போகாது. சூப்பரான டேஸ்டில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. ட்ரை பண்ணி பாக்கறீங்க.

Tasty and yummy besan burfi

     Ingredients:

    • 1 cup ghee
    • 3 cup besan
    • 2 tbsp suji / semolina
    •  cup sugar
    • pinch saffron food colour
    • ¼ tsp cardamom powder
    • INSTRUCTIONS: 

      • firstly, in a large kadai heat 1 cup ghee and add 3 cup besan.
      • mix the besan until the besan is well combined. besan starts to absorb ghee from the besam.
      • add 2 tbsp suji and mix well.
      • continue to roast the besan on low flame for 30 minutes.
      • after 30 minutes, the besan starts to release ghee.
      • roast until the besan turns golden brown and silky smooth consistency.
      • transfer to the large plate and keep aside.
      • in a large kadai take 1½ cup sugar and ½ cup water.
      • stir and dissolve the sugar.
      • continue to boil for 1 string consistency.
      • now add pinch saffron food colour and ¼ tsp cardamom powder.
      • mix well making sure everything is well combined.
      • now add roasted besan and mix well. make sure to keep the flame on low or turn it off.
      • mix until the mixture is well combined.
      • now transfer to the tray lined with baking paper.
      • press and level up making sure it is set uniformly.
      • rest for 30 minutes, or until the burfi sets.
      • cut into pieces of your desired shape.
      • finally, enjoy besan burfi for a month when stored in an airtight container.

    5minutes recipe easy egg rice

    https://youtu.be/ifvshPhtZt8?si=Zx4kUWsS2VQXui7U
    Please subscribe my channel and share to your friends and relatives and support me 

    புடலங்காய் கிரேவி

     



    தேவையான பொருட்கள்: புடலங்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து. 

     செய்முறை: முதலில் புடலங்காயின் மேல் உள்ள தோலை கத்தி வைத்து கீறி கொள்ள வேண்டும். பின்னர் புடலங்காயை குறுக்கில் அறிந்து கொண்டு, அதன் உள்ளிருக்கும் விதைகள் மற்றும் தசை போன்ற பகுதியை நீக்கி விட வேண்டும். பின்னர் புடலங்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் இரண்டு வெங்காய மற்றும் தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் புடலங்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். புடலங்காய் வெந்து வருவதற்கு முதலில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் மூடியை திறந்து நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கலந்து விட்டு, மூடி போட்டு வேக வைக்கவேண்டும். சிறிது நேரத்தில் இவை அனைத்தும் நன்றாக கொதித்து, சற்று கெட்டியான பதத்திற்கு வரும்போது, கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் தொக்கு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தயாராகிவிட்டது.

    Homemade pani puri


     https://youtu.be/fjIZUNiTje8?si=sfNI9SKQYM9jiu9s please click this link and open and watch the recipe and all of you try this recipe and give your comments please subscribe my channel and share to your friends and family members