async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: November 2022

Famous street food egg kalaki

 ரோட்டோர கடைகளில் முட்டை கலக்கியை வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி:


தேவையான பொருட்கள்:

முட்டை - 2மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - சிறிதுசிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா - 2 கரண்டி நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பின்பு அதில் சிக்கன் / மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும். நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.சூப்பரான முட்டை கலக்கி ரெடி!

HOW TO MAKE TANDOORI CHICKEN

 


INGREDIENTS OF TANDOORI CHICKEN

6 Servings
  • 1 kilograms chicken
  • 1 tablespoon ginger paste
  • 1 tablespoon garlic paste
  • 2 teaspoon red chilli powder
  • salt as required
  • 1 teaspoon turmeric
  • 1 teaspoon cumin powder
  • 2 teaspoon coriander powder
  • HOW TO MAKE TANDOORI CHICKEN

    Step 1:

    Prepare The Marinade For Tandoori Chicken
  • To make your very own tandoori chicken recipe, take the chicken, wash nicely and pat dry. Cut the chicken in pieces. To prepare the marinade, take a large bowl and mix together yoghurt, lemon juice, ginger-garlic paste, red chilli powder, turmeric, cumin powder, black pepper powder, coriander powder, garam masala, kasoori methi powder, mustard oil and salt to taste. Coat the chicken very well in this marinade and place it in the refrigerator. Let the chicken marinate for 8-10 hours. Once marinated, let it sit in the room temperature for an hour before continuing with the further steps. Meanwhile, preheat the oven at 200 degrees Celsius.

  • Step 2:
    Bake The Marinated Chicken For 45-50 Minutes
  • Next, take a baking tray and put aluminium foil on it, then keep a drip tray on top of this baking tray. Put the marinated chicken on this tray and sprinkle a little cornflour on top of these marinated chicken pieces. Place the tray in the oven and bake for 45-50 minutes. Make sure to turn the chicken pieces in between.
  • Step 3:
    Serve Tandoori Chicken With Green Chutney
  • When you take them out, they should be crispy and cooked thoroughly. Let the chicken pieces stay in the oven for 10 minutes more even after it has been turned off. Your Tandoori Chicken is ready! Serve with green chutney.

Potato puttu side dish for sambar rice and curd rice in tamil

 உருளைக்கிழங்கு புட்டு:



தேவையான பொருள் :

உருளைக்கிழங்கு -1/4 கிலோ

உப்பு -தேவையான அளவு 

தேங்காய்-1/2 மூடி 

தாளிக்க:

கடுகு-1ஸ்பூன்

உளுந்து-1ஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

சீரகம்-1ஸ்பூன்

பச்சைமிளகாய்-2

சின்ன வெங்காயம் -10

நல்லெண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி வைக்கவும் .

சின்ன வெங்காயம்,பச்சைமிளகாயை

பொடியாக நறுக்கி கொள்ளவும். 

தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் உப்பு சேர்த்து மசித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,சீரகம் சேர்ந்து கருவேப்பிலை சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் சேர்ந்து நன்றாக வதக்கவும்.

அடுத்து உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு  ஒரு சேர கிளரவும்.

2நிமிடம் கழித்து தேங்காய் துருவலை போட்டு கிளரவும்.பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார். 

இது சாம்பார் சாதம் ,ரசம் சாதத்துடன் சேர்ந்து பரிமாறலாம்.



Tasty and yummy onion samosa

 


மொறு மொறு சமோசா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. மாவு - 200 கிராம் 
  2.  உருளைக்கிழங்கு - 2 
  3.  வெங்காயம் - 2
  4.  சீரகம் - ஒரு தேக்கரண்டி
  5.  மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
  6.  எண்ணெய் - தேவையான 
  7. அளவு உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

  8. ஒரு பாத்திரத்தில் மாவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும். 
  9. உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். 
  10. பிறகு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். 
  11. அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

     உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை தட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து கூம்பு போல் செய்து கொள்ளவும். 

     அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

  12. இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும். ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். 

     இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா ரெடி.

Noodles pakoda in tamil

 


தேவையான பொருட்கள்

மேகி - 140 கிராம்

வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று எடுத்துக் கொள்ளவும்.

மல்லித்தழை - ஒரு கைப்பிடி

சில்லி ப்ளாக்ஸ், இஞ்சி பூண்டு விழுது - தலா அரை ஸ்பூன்

மேகி மசாலா மற்றும் வெண்ணெய் - தலா ஒரு ஸ்பூன்

சீஸ் - ஒரு கியூப்

கேரட் - ஒன்று

மைதா மாவு - 2 டீஸ்பூன்

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கேரட் இவற்றினை பொடியாகி நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

முதலில் 70 கிராம் மேகியை மட்டும் சுடுதண்ணீரில் போட்டு வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள மேகியை நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு வேக வைத்த மேகி, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கேரட், இஞ்சி பூண்டு விழுது, வெண்ணெய், சீஸ், சில்லி ப்ளாக்ஸ், மேகி மசாலா இவற்றினை சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

இதனைத் தொடர்ந்து எண்ணெய் தடவிய தட்டில் காட்டி கலவை பரப்பி வைத்து ஃபிரிட்ஜில் அரை மணிநேரம் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து, பின் மைதா மாவு கரைசலிலும், மேகி பொடியிலும் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.சூப்பரான நூடுஸ் பக்கோடா  ரெடி. 

சுவையான குழந்தைகளுக்கு பிடித்த மேகி பக்கோடா தயார்.  

Healthy ginger chutney

 

மழைக்காலத்திற்கு இஞ்சி சட்னி அரைச்சு சாப்பிட்டால் ரொம்ப நல்லது..! 



இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. அப்படி இந்த இஞ்சி சட்னியையும் வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிடுங்கள். செய்முறை இதோ...

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 1/2 கப்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - சிறிதளவு

வெல்லம் - 1/2 tsp

எண்ணெய் - 2 tsp

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்று இஞ்சியை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதிலேயே கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

அவை ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக அதை வழித்து கிண்ணத்தில் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இஞ்சி சட்னி தயார்.