தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு ஆழாக்கு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பசு நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு – 4, பட்டை – 2, ஏலக்காய் – 2, அன்னாசிப்பூ – 1, கல்பாசி – 1, சோம்பு – ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, தக்காளி சாறு – 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, புதினா – ஒரு கைப்பிடி, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – தே
முதலில் ஒரு ஆழாக்கு அளவிற்கு பாஸ்மதி அரிசியை எடுத்து நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். இவை நன்கு காய்ந்து வந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கல்பாசி, அண்ணாச்சி பூ ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போனதும் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய்களை முழுதாக அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கியதும் மல்லி தழை மற்றும் புதினா இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து இவற்றுடன் சேர்த்து சுருங்க வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்க்க வேண்டும்.