async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: மிந்து போன இட்லி மாவு வைத்து ஒரு காலை உணவு

மிந்து போன இட்லி மாவு வைத்து ஒரு காலை உணவு

 தேவையானவை: 


மிகுந்து போன இட்லி மாவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - இரண்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு

 தயிர் - 2 டீஸ்பூன்

ரவை - 2 டீஸ்பூன்

தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
அடுப்பில் வாணலியை வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, மிகுந்து போன இட்லி மாவில் கொட்டி நன்கு கலக்குங்கள். பிறகு மைதா மாவு, தயிர், ரவை ஆகியவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கி, கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், கரண்டியில் மாவை எடுத்து, ஓரளவுக்கு சின்னதாக ஊற்றுங்கள். எண்ணெய் விட்டு சுட்டெடுங்கள். தோசையின் நடுப்பக்கம் கெட்டியாகவும், அதன் ஓரங்கள் மொறுமொறுவென்றும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்... காலை உணவு ரெடி.
காலை உணவாகவும் சாப்பிட்டு கொள்ளலாம். ஒருவேளை மதியமும் இதையே கொண்டு செல்ல விருப்பமாக இருந்தால், ஒரு தோசை வைத்து, அதன் மீது தோசை மிளகாய்ப்பொடியை நல்லெண்ணெய் கலந்து தடவிவிடுங்கள்.
இப்படி பொடி தடவிய தோசையின் மீது மற்றுமொரு தோசையை வைத்துவிடுங்கள். இறுதியாக வைக்கும் தோசையின் மீது கண்டிப்பாக நல்லெண்ணெயில் கலந்த பொடியை தடவ வேண்டும்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog