async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: சைவ கோலா உருண்டை

சைவ கோலா உருண்டை

 சேவைக் கிழங்கு உருண்டை:



மட்டன் கோலா உருண்டை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதே சுவையில் சேனைக் கிழங்கை வைத்து செய்யலாம்.

வாழைப்பூவிலும் இதே போல் செய்யலாம். மட்டனுக்கு பதிலாக அரை வேக்காடு வெந்த காயை சேர்த்து அதே செய்முறையில் பொரித்து எடுக்கவும்.

1 கப் பொட்டுகடலை

1ஸ்பூன் சோம்பு

2 மிளகாய் வற்றல்

1 பட்டை

1 கிராம்பு

இவற்றை மிக்ஸியில் பொடி பண்ணவும்.

தனியே வைக்கவும்.

அடுத்து மிக்ஸியில்

4 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

1 வெங்காயம்

அரை கப் தேங்காய் துருவல் இவற்றை கரகரப்பாக அரைத்து அத்துடன் ஒரு கப் வேக வைத்த சேனைக் கிழங்கு அல்லது வாழைப்பூ தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தழை இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

இத்துடன் பொடித்த பொட்டுக்கடலையை சேர்த்து வடை மாவு போல பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் பொரிக்கவும்.

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog